Saturday, August 06, 2005

பொன்னியின் செல்வன்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் சுமார் 1037 ஆண்டுகளுக்கு முன்னால் வீரநாராயண(வீராணம்) ஏரிக்கரையோரம் ஆடிப்பெருக்கு திருநாளன்று முன்மாலை நேரத்தில் தொடங்கும் அந்தப் புதினம் தமிழ் இலக்கிய வரலாற்றின் மிகச்சிறந்த படைப்புக்களுள் ஒன்று. ஐயத்திற்கு இடமின்றி தமிழகத்தின் தலைசிறந்த சரித்திர நாவல் அதுவே. மாமன்னன் ராஜராஜ சோழனின் இளமை கால நாட்களை விவரிக்கும் அந்த நாவல் லட்சக்கணக்கானோரை சோழ குலத்தின் விசுவாசிகளாய் மாற்றி அமைத்திருக்கிறது.

நாவல் என்றாலும் அது முழுக்க கற்பனை அல்ல. பல்வேறு கல்வெட்டுக்களையும், செப்புப்பட்டயங்களையும் படித்துணர்ந்து, கதைக்களத்திற்குச் சென்று பார்வையிட்டு, பல்வேறு நூல்களை ஆராய்ந்து அமரர் கல்கியால் வார்க்கப்பட்ட அற்புதப் படைப்பு.

அதை படிக்கும் பொழுதெல்லாம் இத்தகைய சிறந்த பண்பாடு, அறம், திறம் கொண்டிருந்த நாம் அதே காலகட்டத்தில் காட்டு விலங்கைப்போல் வாழ்ந்து கொண்டிருந்த பரங்கியரிடம் பின்னாளில் அடிமைப்பட்டு கிடக்க வேண்டிய நிலையேற்பட்டதை நினைத்து மனம் வெதும்பும்.

என்னுடைய கருத்துப்படி அந்த நிலைக்கு காரணம் இஸ்லாமியக் கொள்ளையர்களே. அவர்களை விரட்டியடிக்கக்கூடிய திண்மையுள்ள மன்னர் எவரும் வட இந்தியாவில் இல்லாதது நமது துரதிருஷ்டம். முகாலயப் படையெடுப்புக்கள் நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெரும் வீழ்ச்சியைத் தந்தது. பல்கலைக்கழகங்கள் எரியூட்டப்பட்டன. காலம் காலமாக நமது மண்ணில் உருவான சாஸ்திரங்கள்(sciences) நிராகரிக்கப்பட்டன. அத்துடன் நமது அறிவியல் வளர்ச்சி தடைபட்டது. சமூக முறைகள் உருக்குலைந்தன. சிதைந்திருந்த நமது சமூகத்தின் மீது ஐரோப்பியர்களின் அடுக்கடுக்கான படையெடுப்புக்கள் நிகழ்ந்தன. நல்ல கலாசாரத்தை போதிப்பதாக நினைத்துக்கொண்டு பரங்கியர்கள் தங்களுடைய கல்வியையும், மதத்தையும் புகுத்தினர். இப்படி பல நூற்றாண்டுகளாக இடி மேல் இடியாக வாங்கி வாழ்வியல் உச்சத்திலிருந்த நாம் அதல பாதாளத்தில் விழுந்து இன்று தட்டுத்தடுமாறி மேலை நாடுகள் காட்டிய வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.

என்ன குடிமுழுகிவிட்டது இப்பொழுது நன்றாக தானே முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம், உண்மை ஆனால் சரியான வழியில் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ஏன்? எவ்வாறு? என்று கேட்டால் பதிலே ஒரு பெரும் பதிவாக இருக்கும் அதனால் அதைப்பற்றி இப்பொழுது கூறப்போவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் இதே வழியில் சென்றால் நமது கலாசாரத்திற்கு அடிநாதமான நெறிகளை மறந்து பணத்திற்காக எதையும் செய்யும் அடிப்பொடி கூட்டமாகத்தான் இருப்போம்.

ராஜேந்திர சோழனைப் பற்றி 'த வீக்' வார இதழ் குறிப்பிட்டிருந்தது தான் நினைவுக்கு வருகிறது. "ராஜேந்திரன் கீழைக்கடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்த அதே காலகட்டத்தில் தான் கொள்ளையன் கஜினி முகமது தன் இந்தியப் படையெடுப்புக்களை தொடங்கியிருந்தான். அச்சோழப்பேரரசன் மட்டும் வடக்கேயுள்ள ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்திருப்பானாகில் இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்."

2 Comments:

Blogger Ganesh Gopalasubramanian said...

வரலாறு படிப்பவன் வரலாறு படைப்பான் என யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது. மேலும் இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் பலர் வரலாறு படித்தவர்கள் தான் என்ற ஆதாரத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். வரலாறு படைப்பீராக !!

9:55 PM  
Blogger Ramesh said...

மிக்க நன்றி மஞ்சுளா. என்னை தமிழில் எழுதத் தூண்டிய அருமைத் தம்பி கணேஷுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

8:43 PM  

Post a Comment

<< Home