Monday, August 08, 2005

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன் இதே ஆடிப்பூர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) மகளாக அவதரித்தாள் கோதை. கடவுளை வணங்கக்கூடிய ஆறு வித 'பாவங்களில்' சிறந்ததாகக் கூறப்படும் 'மதுர பாவம்' என்னும் காதல் பாவத்தில் தன்னை நிறுத்தி காலத்தால் அழியாத 'திருப்பாவை' மற்றும் 'நாச்சியார் திருமொழி' யை அருளி, ஸ்ரீரங்கநாதராலேயே தம்மை 'ஆண்டாள்' என்றழைக்கப்பட்ட 'சூடிக்கொடுத்த சுடர்கொடி' யின் பத்ம பாதங்களுக்கு புகழ் சேரட்டும்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!


2 Comments:

Blogger Ganesh Gopalasubramanian said...

என்ன ரமேஷ் அண்ணா !

திருப்பாவை முப்பது, திருவெம்பாவை இருபது, திருப்பள்ளியெழுச்சி பத்தென இப்பொழுதே ஆரம்பித்து விட்டீர்கள். இன்னும் மார்கழி மாதத்திற்கு நாட்கள் இருக்கின்றன :-)

9:25 PM  
Blogger Ramesh said...

அதனாலென்ன கோகுலாஷ்டமியும், புரட்டாசியும் நெருங்குகிறதே! :)

11:55 AM  

Post a Comment

<< Home